×

திமுக பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

செங்கல்பட்டு: வண்டலூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் கடந்த பிப்ரவரி 29ம் தேதி காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நீதிமன்றங்களில் ஒரு சிறுவன் உட்பட 9 பேர் சரணடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஓட்டேரி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரணடைந்த கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன், முனீஸ்வரன், சத்தியசீலன், சம்பத்குமார், மணிகண்டன் ஆகிய 8 பேரை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கினார்.

திமுக பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில் கொலைக்கான காரணம் குறித்து முழுவதுமாக தெரிய வராத நிலையில் ஓட்டேரி போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் குற்றவாளிகளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வண்டலூர் அருகே உள்ள ஓட்டோரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

The post திமுக பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Chengalpattu ,Vandalur ,Chengalpattu District ,Kattangulathur North Union ,Aramudhan Nattu ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்